அவளுக்காக ஒரு கானம்
இனிய கானம் இசைக்கும்
இராப்பாடி பறவையே ..
தெளிந்த நீரினில் ஓடும்
தேர்ந்த மீன்களும் உணவும் தான்
உன் ஆசைகள் ..!
கடலோர பனைமர உச்சியில் நீ
கட்டியுள்ள எழில்மிகு கூட்டில் தான்
உன் இருப்பிடம் !
உன் துணைதனை எந்நாளும்
பிரியாது வாழும் முறைதான்
உன் குணம்!
நீ சந்தித்த மனிதனோ..
போதை தரும் மதுவுடனும் ..
இளம் காதல் மாதுடனும்..!
உன் அழகு வார்த்தைகளில்
குழந்தை உள்ளம் கொண்ட
அந்த பெண்ணின் ..
உன்னால்
இழந்த அழகை ..
திருப்பி கொடுக்கச் சொல்லும் ..
உனது இனிய கானம் ..
..
அவளுக்காக ..நீ
எழுப்பும் குரல் தானோ?
(ஆங்கிலத்தில் Dr.V.K.Kanniyappan அவர்கள் எழுதியிருந்த ஒரு அழகான கவிதையின் தமிழாக்கம்.
அவரது ஆங்கில கவிதை:
Beauty of the girl who has the youthful prattling speech! Poem by Dr.V.K. Kanniappan
O' Nightingale! who feeds as much fish
…and food as you desire,
from the clear water of the channels
...arising from the sea
and lives in the nest built on top
...of the nearby high grown
Palmirah trees, without separating
...your companion for ever;
You meet the man who has the beautiful cooling port
and who is the lover of the teen girl; and represent
to him with piling beautiful words to give back the lost
beauty of the girl who has the youthful prattling speech! )