கிறுக்கல்கள் 💕 2 - ப்ரியன்

கிறுக்கல்கள் 💕 2 - ப்ரியன்
====================

விழித்தெழுகிறாய்
தூக்கம் கலைத்து நீ;
கண்சிமிட்டி
உன்னை கண்டுரசித்த
நட்சத்திரங்கள்
உறங்க செல்கின்றன

====================

உனக்கு முன்னெழுந்து
காத்திருக்கிறேன்;
உன் வரவுக்காய்
சூரியனும் நானும்
உன்னிடம் ஒளிபெற

====================

நீ தெருவில்
நடந்து செல்கிறாய்;
எல்லோரையும்
திரும்பிபார்க்க வைத்து
மானிடபிறவிகளாய்
மாற்றி விடுகிறாய்

====================

உன் புன்னகைகளை
கொஞ்சம் கடன்கொடு;
மாதயிறுதியில் பயன்படும்
உணவுக்கு
பணமில்லாதபோது
எனர்ஜி டானிக்காய்

====================

சுருள் முடியிலும்
பெண்ணே நீ அழகு;
உன்னை பார்த்து
அழகை விரும்பி சிலர்
அழகு நிலையம்
போகிறார்கள்
உன்னை பெற்றவரிடம் அல்லவா
கேட்டு அறியவேண்டும்

====================

எப்போதும்
என்னைவிட்டு விலகமாட்டாய்
என்று இருந்தேன்;
கொஞ்சம் கோபம்தான்
உன்மேல்
யாமப் பொழுதுகளில்
என் நினைவுகளில் இருந்து
விலகுகிறாய்

====================
தூண்டுதல் :
நன்றி _காதல் கவிஞர்கள்

எழுதியவர் : ப்ரியன் (12-Apr-15, 1:56 am)
பார்வை : 138

மேலே