தூங்காத ஓர் இரவில்

#கோடுகளற்ற
கோணமானி.
'அரைநிலா'

#கணிணியின்றி
மேகக்கூட்டம்
அனிமேசன் செய்கிறது.
'நகரும் நிலா'

#நிலவை
பாதியாய்
வெட்டியதால்
நிழல் கத்தி.

#எரிந்து சாம்பலாகுது
ஒரு நட்சத்திரம்
நிலாவின் மீது
வயித்தெரிச்சலோ?

#காடுகள்
பூமியில் இருக்க
அங்கு எப்படி
மின்மினிப் பூச்சிகள்?
'நட்சத்ரக் கூட்டம்'

#யுகம் யுகமாய்
ஒரே வரிசையில்
நின்று வருகிறது-அந்த
மூன்று நட்சத்திரங்கள்.

இன்னுமா முடிவாகவில்லை
நடுவில் இருப்பவள்
யாருக்குச் சொந்தமென்று?

#ஊதித் தள்ளுகிறது.
நிலவை புகைக்கு
அடிமை ஆக்கியதார்?
நிலவிலிருந்து விலகும்
வெண்மேகக் கூட்டம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (12-Apr-15, 4:16 am)
பார்வை : 144

மேலே