பொய்யான பொய்களின் சிம்மாசனம்-அலமு

பொய்கள் பேசும் மெய்கள்
மெய்யாகவே பொய்யாகும்....!!!"
மெய்கள் பேசும் பொய்கள்
பொய்யாகவே மெய்யாகும்....!!!

பொய்கள் மெய்யான
மெய்களின் பாதையை
அழிக்கவே துணியும்....

மெய்கள் ஒருபொதும்
பொய்யான பொய்களின் பாதையை அழிப்பதில்லை.....
மெய்யான பொய்கள் தானாய்
அழிந்திடும்.....

முதல் மூன்று பொய்கள்
மெய்களை
பொய்யான பொய்யாக்கிவிடும்....

இரண்டாவது முதல் பொய்யில்
மூன்றும் மெய்யான பொய்யென
தானே உளரிவிடும்.....

பொய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல பொம்மைகள்
மனிதனாகின்றன....
மெய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல மனிதர்கள்
பொம்மை யாகின்றன....!!!!

மெய்யான பொய்களை
நம்பிக்கெட்டவரை விட
பொய்யான மெய்களை
நம்பிக்கெட்டவரே அதிகம்....

பல பொய் பேசினால்
ஒருபல்
உடைவது உறுதி....
ஒரு மெய் பேசினால்
ஒட்டுமொத்த
பல்லும்
உடைவது உறுதி.......!!!

மெய்யான பொய்பேசி
ஓய்ந்தவரை விட
பொய்யான பொய்பேசி
மேய்ந்தவரே அதிகம்.....!!!!

பக்குவமாய் மெய் பேசி
சாய்ந்தவரை விட
சத்தியமாய் மெய் பேசி
மாய்ந்தவரே அதிகம்....

எழுதியவர் : அலமு (12-Apr-15, 2:10 pm)
பார்வை : 93

மேலே