மேக தட்டிலிருந்து

ஒரே மேடையில்
கோடி கோடி திருமணங்கள்
காண சோடி கண்கள் போதா...

சாலையெங்கும்
சிதறிக்கிடக்குது
வண்ண வண்ண பூக்கள்...

செடிகளெல்லாம்
குளித்து, சிங்காரித்து
மொட்டவிழ்த்து
மலர்க் கண்களால்
கல்யாணத்தை காணுது...

வான வேடிக்கைகள்
விண்ணை பிளக்க...
காமிராக்கள் கண் சிமிட்ட
மேகத் தட்டிலிருந்து
தாலித் துளியெடுத்து
மண்ணுக்கு
கட்டியது வானம்...

எழுதியவர் : அறவொளி (13-Apr-15, 10:18 am)
பார்வை : 64

மேலே