natpu

வெற்றியின் போது
கைத்தட்டி சந்தோசப்படுத்த
என்னை ஊக்குவிக்க
நீ இருந்தாய்........................
தோல்விகளின் போது
தோள்கொடுத்து ஆறுதல் சொல்லவும்
தன்னம்பிக்கை கொடுக்கவும்
நீ இருந்தாய்................
கஷ்டங்கள், கண்ணீர் என்றவுடன்
மனம் விட்டு முழுமையாக
பகிர்ந்து கொள்ள என்னுடன்
நீ இருந்தாய்...................
ஆள் இல்லாமால் தனி மரமாய்
நின்ற போது
ஆழமரம் விழுது போல்
என்னை பாதுக்காக்க
நீ இருந்தாய்...........................
என்னில் ஒவ்வொரு படியும்
நான் ஏற அவற்றை
ஒரு சிற்பியே போல் செதுக்க
நீ இருந்தாய்................
என்னை
சந்தோசப்படுத்த,
பாதுக்காக்க,
ஊக்குவிக்க,
தோள்கொடுக்க,
இப்படி எத்தனனை,
எனக்கவே இந்த பிறவி எடுத்தாயோ- நட்புக்காக