அணைந்த தீபமாய்

கலைந்த கனவாய்
கிழிந்த துணியாய்
காய்ந்த சருகாய்
உதிர்ந்த மலராய்
அணைந்த தீபமாய்
களையிழந்த கோயிலாய்
சிதைந்த சிற்பமாய்
மணமிழந்த மாலையாய்
வறண்ட வயற்பரப்பாய்
வற்றிய நதியாய்
பாலைவனத்தில் கருகும்
பயிராய்
கண்டேன் என்னவளை
பாசத்தோடும்
போராட்டங்களோடும்
பயணிக்கும் வாழ்க்கையில்
கணவனைப் பிரிந்து
கஷ்டங்களை சுமந்து
பிள்ளைகளை வளர்க்க
மெழுகாய் கரையும்
மெல்லியளாளைக் கண்டு
கரைந்தே போனேன் காதலியே