சுடுதலும் சுடுதலும்
தோட்டாக்கள் தோட்டமாகும்
களமே தேகமோ
உணர்வில்லா பீரங்கிக்கு
கொலைவெறி மோகமோ
ஓம்புயிராய் உயிரா குது
ஒட்டுண்ணியும் உடன் போக
வஞ்சகத்தால் வெந்திடும்
மாருதங்கள் மாற
ஈயச்செம்பு ஏவு கணைபறித்
திடும் வாடகை மூச்சுகள்-ஈ
க்கள் மொய்த்திடும் எழவு
நிகழ்வுகள்
உயர்திணை வீழ்ந்துப் போகும்
அஃறிணையின் வெற்றிக்கதை
வீதியெங்கு மெந்தன் சகோ
தரனின் தோல் காத்த சதை
மரண சடலங்கள் உருப்படுத்த
நீண்ட துமுக்கிகள் - குவிந்த
மிச்சங்கள் கரைந்த அச்சங்கள்
கழுகுக்கு படையலாய்
வஞ்சகம் நுகர்ந்திடும்
மானிட வாடை
ரத்தங்க ளினி- ஓய்
வில்லா ஓடை
வண்டென பறக்கும்-வெடி
குண்டுகள் வந்தடைய
மிழற்றும் மழலைகள்
தப்பிக்குமோ ?
நகைத்திடும் களிக்குடும்பம்
கருகிடும் பெரும வளம்
நிறமறியாத நகம் மிஞ்சுமோ
தலை வளர்த்த மயிரெஞ்சுமோ
இராணுவ தத்துவத்தை மாற்றி
அரக்கப் பண்புகளைப் போற்றுமிந்த
ஈரமில்லா வேசி மகன்களுடைய
குறியினை அறுத்தெடுங்கள்
தாரும் கூழையும்
விளையாடும் மைதானம்
தமிழனென்று அடையாளம்
கொண்ட மாந்தார் நெருள்களே
புரையென்ன புலப்படவில்லை
சுமை மட்டும் தொடர்ந்து படரும்
முன்னோடியின் நிம்மதி
தெருக்கோடியிலும் காணேன்
இறந்த நிகழ் இதனால் வரு
மெதிர் காலங்க ளெல்லாம்
ஒளிவாங்கிகள் படமெடுக்
காமல் விட்டதில்லை
சுடுவதை சுட்டிடும்
அழுகைகள் பதிவிடும்
சுட்டதை திரைமுன்
சுட்டு சூடாக்கிடும்
சுடுதலுக்கும் சுடுதலுக்கும்
போர்றொன்று முண்டால்
சுட்டும் சுடப்பட்டும் சூடுபட்டும்
உண்மை உரைக்க மறக்காதே
வாழ்க சுடுபடக்கருவி
அடேடே மன்னிக்கவும்
வாழிய வாழியவே நீ
நிழற்படக் கருவி!!