பாடல்

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

You are the love of my life and my dreams forever
You are the love of my life and my dreams forever

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

One அ Two அ Three அ Four அ

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறௌ என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு...

எழுதியவர் : (17-Apr-15, 3:21 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : paadal
பார்வை : 33

மேலே