நான் என்ன செஞ்சன்

இம்மையில பாவம் செஞ்சா

மறுமையில தொடரும் பாட்டன்

சொன்னான் .....


என்னத்த செஞ்சனோ கல்லுன்னு

தெரிஞ்சும் கால்வைக்கறேன் முல்லுனு

அறிஞ்சும் முகம் தொடறேன்

கண்ண மூடினா கரும்பூதம்

தெரியுது ... என்னமோ நினைச்சா

ஏதோ நடக்குது சிரிப்புன்னு

தொடங்கி அழுகைல முடியுது...

மூச்சுவிட்டா சுவாசம் இல்ல

மனசுல நெஞ்சுல நிம்மதி

கிடைக்கல... காசுக்கு ஓட

கடுகுதான் மிச்சம் ... மனிசனா

வாழ நினைச்சு மிருகமா

மாறியாச்சு ... பாவம்னு தெரிஞ்சா

பத்து அடி தள்ளியும்

தப்புன்னு அறிஞ்சா தாண்டி

ஓடியும் வேதனைன்னு நினைச்சா

வேண்டாம்னு விட்டும் கஷ்டம்னு

கண்டா கல்லா மாறியும்

போதும்னு தோணினா பொறுத்தும்தான்

போறேன்... எம்மைல என்ன

செஞ்சனோ எனக்கும்தான் விளங்கல????/

எழுதியவர் : வீரா ஓவியா (19-Apr-15, 12:56 pm)
பார்வை : 95

மேலே