தங்க பூமி

மண்ணை புண்ணாக்கி
விளை நிலத்தை
விலை பேசி
வீட்டடி மனையாக்கி
விவசாயம் என்ற தொழிலுக்கு
வினாக்குறியிட்ட அவல நிலை கண்டும்,
வருங்கால தலைமறைக்கு
விடை தெரியா புதிராக்கிய
வேதனை கண்டும்,
வெம்பி அழ முடிகிறதே அன்றி
வேறென்ன செய்ய முடிகின்றது?
என்ற என் இயலாமையை , நானே
ஏசிக் கொள்கிறேன்.

எழுதியவர் : தேவிபாபு (20-Apr-15, 12:18 am)
Tanglish : thanga poomi
பார்வை : 63

மேலே