சின்ன சின்ன ஆசை
கற்பனையில் முதல்வரானால்
பழைய பதவிகளை முதலில் அகற்றி விட்டு
புதிய இளஞர்களை பதவிகளில் அமர்த்தி
நாட்டின் ஒவ்வொரு பொறுப்புக்களையும்
அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒப்படைப்பேன்
இரண்டாவது நான் செய்யும் நல்ல செயல்
அடிப்படைத் தேவைக்கான அத்தனை
பொருட்களையும் நடைமுறையில் இருக்கும்
விலையில் பாதி விலையாக்கி மக்களை
வறுமை எனும் பிணியில் இருந்து மீட்டு
மக்கள் ஏழை பணக்காரன் பேதம் மிகவும்
குறைந்திட செய்து ,
சுரண்டி வாழும் மனநிலை நம் மக்களிடம்
எழாதபடி பார்த்துக் கொள்வேன்
மக்கள் தீர்க்கும் எந்த முடிவும் முதல்வரின் முடிவாகும்
வளர்ந்து வரும் முன்னேற்றம் எந்த துறையிலும்
முன்னேற வகை செய்து கொடுத்திடுவேன்
பொருளாதாரம் சீருடன் இருந்து விட்டால்
நாட்டில் பஞ்சம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை
மக்கள் போற்றும் மகத்தான சேவை செய்ய
முதல்வர் என்ற பொறுப்பு மிக்க பதவி போதும்
லஞ்சமும் வஞ்சமும் நாட்டில் அறவே ஒழிந்திட
திட்டங்கள் பல மக்கள் மனங்களில் புகுத்திட
அயராது உழைத்து அன்பு என்ற ஆயுதம் கொண்டே
அரவணைத்து ஒன்றே குலம் நாம் என்ற
நலம் கொண்டு நம்மையும் நாட்டையும்
காத்து வாழ்ந்திட வழி செய்வேன் ,
எதற்காகவும் போட்டி பொறாமை நம் மக்களிடையே
எழுந்திட வாய்ப்பே இல்லை என்றாகும்
தேவைகள் யாவும் நிறைந்து விட்டால்
மக்களுக்குள் போராட்டம் ஏது/ ஆர்ப்பாட்டம் ஏது/
பழையன கழிந்து புதியன வாழ்வில் புகுந்து விடும்
குழப்பமற்ற தெளிந்த நீரோடை போல்
நம் மக்கள் வாழ வழி பிறக்கும்
இது எனது சின்ன சின்ன கற்பனையில்
மிதந்து வந்த ஆசை மன்னிக்கவும்