மரணம் மட்டும் சுகமல்ல

நீ விட்டுப் போன
உலகத்தில்
இன்னும் வாழ்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய் வீழ்கிறேன்

மரணம் மட்டும் சுகமல்ல
முழித்திருந்து தூங்கினாலும்
தூங்கிவிட்டு முழித்தாலும்

இருளிலும் பகலிலும்
நீ வரும்
கனவுகளும் சுகமே

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (22-Apr-15, 9:45 am)
பார்வை : 88

மேலே