பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் தான்என்டிடிவி யின் பேட்டியில்கமலஹாசன் சொன்னது

பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் தான்....என்.டி.டி.வி. யின் பேட்டியில்......கமலஹாசன் சொன்னது... !

ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.

மாடுகளைக் கொல்வதைத் தடுக்க வேண்டும் என்றால்,
மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்வதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்வதையும் தடுக்கணும்.

வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதைச் சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது என்றார்.

காலம் கடந்து கூட சொல்கிறாரே...என்று எடுத்துக் கொள்ளலாம்....

ஆனால் அமெரிக்கா என்ற உலக மனிதகுல விரோத அரசு பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் கொன்றதில்லை என்று சொன்ன கருத்துக்களை அல்ல....பொய்களை ஏற்றுக்கொள்ள முடியாது...

என்றாலும் பகுத்தறிவு / முற்போக்கான கருத்துக்களை சொல்வதற்கு இன்று ஆட்கள் இல்லாத நிலையில் மாட்டுக்கறி உணவை சாப்பிடலாம் / சாப்பிடக் கூடாது என்று சொல்லும் யோக்கியதை அரசுக்கு இல்லை என்று சொல்வதை ஆதரிக்கலாம்....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (22-Apr-15, 2:40 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 175

மேலே