கோவை கவி

கோவை கவியே !
உமக்கு ஒருகவி !
``````````````````````````````````
நிரல் பலகையில்
நிரந்தரமான பதவியை பிடித்தவரே !
நித்திரையிலும்
நித்யம் கவி பதிவு செய்பவரே !
எத்தலைப்பிலும்
களைப்பில்லாமல்
எழிலாய்
குயிலாய்
கவிக்கு இனிமை செர்ப்பவரே !
எண்ணங்களுக்கு
கவியால் ஓவியம் தீட்டுபவரே ! !
உம் கவி நெரிசலுக்கு
வேகத்தடை அமைத்தாலும்
தடை தாண்டுதலில்
முதல் இடம் பிடித்திடுவீர்!!
எண்ணங்களின் ஓட்டத்தில் நீர்
ஒரு சதாப்தி !
எழுத்துக்களின் வடிவமைப்பில் நீர்
palace on wheels !!
பல புள்ளிகள் எடுத்து
பெரும் புள்ளியானீர் !!
பெரும் புள்ளிகளால்
நடு நிலையாளர் ஆனீர் !
கவியை
சுவாசீத்தீர் !
நேசித்தீர் !
சுவையாய்
படைத்தீர் !
வார்த்தைகளில்
வர்ண ஜாலக்காரர் !
கருத்துக்களை
மூச்சு விடாமல்
அளிப்பதில்
பிரபல பாடகர்
திரு பாலசுப்ரமணியம் !!!
தொற்று நோயோ என்னவோ
தெரியவில்லை
உம்மை பற்றி
கவியை படைக்க நினைத்தேன்
முடிக்க முடியவில்லை !!!!!
எழுத தெரிந்த மனமே ..............
உனக்கு...... முடிக்க.... தெரியாதா ......
எனும் f m இல் ஒலித்த பாடலால்
முடித்து விட்டேன் !!
வாழ்க வளமுடன்
தொடருங்கள்
உங்கள் மாரத்தான் கவி ஓட்டத்தை !
எழுத்து தளத்தில் நீர்
ஒரு அசையா சொத்து !
=========================================
நாராயண ஹரி
நாராயண ஹரி
நாராயண ஹரி
நர ஹரி நர ஹரி !!!!
----------------------------------------------------------------------
கிருபா கணேஷ்