சுடும் வறுமை

வல்லவனே வளம்தருவாய்
வறுமையிலே வாடுகிறேன்
நல்லவனாய் நானிருக்க
நால்திசையும் ஓடுகிறேன்

பணமில்லை என்றகுறை
பரிதவிக்கும் இந்தநிலை
கணம்தோறும் நெரித்திடவே
கவிதையிலே அழுகின்றேன்

கடன்பட்டு நான்செய்த
கைங்கர்யம் மண்ணோடு ..
உடன்பட்டு வரஎனது
உயிமட்டும் என்னோடு

மனிதர்களைப் பார்க்கையிலே
மனமிங்கு சிரிக்கிறது
இனியனவே செய்துபெறும்
இன்னல்கள் வதைக்கிறது

பிணத்திற்கே உயிர்கொடுக்கும்
பெரியவனே உனைமறந்து
பணத்திற்காய் உயிர்கொடுக்கும்
பாவிகளின் மத்தியிலே

வாழுகின்ற நிலையினைஏன்
வழங்கிஎனை வாடவிட்டாய் ?
சூழுகின்ற துயரங்கள்
சுடுகிறதே சுடுகிறதே

எழுதியவர் : அபி (25-Apr-15, 12:26 am)
பார்வை : 327

மேலே