ஏப்ரல் வெயிலும் சிட்டி பஸ்ஸும்

ஏப்ரல் வெயிலில் சிட்டி பஸ்ஸும்
இரும்பு நிலவாய் குளிர்கிறதே
பயணச்சீட்டை போலென் மனதை
உந்தன் சிரிப்பே கிழிக்கிறதே

படியில் நானும் தொங்கிட
நெரிசல் மீறி நீ பார்த்திட

கடகட சத்தம் சந்தம் சொல்ல
கசமுசா கூச்சல் பின்னணி ஆக
நடத்துனர் விசிலும் கூடுதலிசையே
நகரப் பேருந்து நகரும் மேடையே

பாடல் ஒன்று நான் பாட
காதல் வந்து தான் ஆட
படபட என நீ இமைக்கும் கண்கள்
பரிசாய் எனக்கே
தகர விரிசலில் விரல்கள் கீறியும்
வலிக்கல பெண்ணே.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (25-Apr-15, 11:43 am)
பார்வை : 86

மேலே