பேரரளிப் பூக்கள் Translation of DAFFODILS by William Wordsworth
பரந்த பள்ளத்தாக்குகள்..உயர்ந்த மலையுச்சிகள்
மீது தனிமையில் .. மேகமொன்றினைப் போல்
அலைந்திருந்தேன் அன்றொரு நாள் ..அப்பொழுது
கண்டேன் .. ஈர்க்கின்ற அரிய காட்சியொன்று !
..
ஆங்கோர் ஏரியின் ஓரத்தில் ..மரங்களின் பாதத்தில்..
தென்றல்காற்றினில் .. அசைந்து.. அசைந்து..அசைந்து
நர்த்தனம் ஆடும் பொன்னிற கூட்டமாய்
மஞ்சள் நிற பேரரளிப் பூக்கள் தம்மை !
..
எல்லையிலா வானத்து பால் வீதிதனில்
மின்னுகின்ற ஒளி வீசும் தாரகைகள்
களிப்புடனே கண்கள் சிமிட்டுதல் போல்
இப்பூக்களும் நெடியதொரு நீள்பாதையில்
விரிந்து கிடந்தன .. அந்த ஏரியின் தீரத்தில்!
பதினாயிரம் கோடி பூக்கள் ஓரிடத்தில் ..
தலையாட்டி உயிர்க்கின்ற எழில் காட்சி தந்து !
****
வீசிடும் தென்றல் காற்றும் ஆட..அவற்றை
போட்டியிட்டு வென்றன பேரரளிப்பூக்கள் ;
இன்பமயமான இந்த ஜோடிகளின்
பேரின்ப ஆட்டத்தை கண்டபின்னும்
எக்கவிஞன்தான் கடந்திடுவான் ..
தன் மனம் இழக்காது ?
அப்படித்தான் நானும் நின்றேன்..
வைத்த விழி வாங்காது ..
உற்று நோக்கி உறைந்து நின்றேன் ..
அப்பூக்களின் நடனம் கண்டு!
எத்துனை பெரியதோர் பரிசு இது ..
இயற்கைத்தாய் எனக்களித்த பேருவகை என்று!
****
இப்படியோர் காட்சிதனை கண்ட பின்பு
எப்பொழுதெலாம் எனக்குள் ஓர் சூன்யநிலை ..
அன்றியொரு நீள்யோசனை ..
சூழ்ந்திடினும் .. நான்
உள்நோக்கிப் பயணிப்பேன் ..சற்று நேரம் !
அப் பேரரளிப்பூக்களின் நர்த்தனத்தை..
ரம்மியமான அவ்வினிய காட்சிதனை ..
ஏகாந்தத் தனிமையதில்..நான் பெற்ற இன்பத்தை..
விழித்திரையில் கொணர்ந்திடுவேன்..
ஒரு நொடியில்..இதயமதில்
மகிழ்ச்சி வெள்ளம் பல்கிப் பெருகும் ..
அப்பூக்களுடன் என்னிதயம் ..ஒன்றாய் சேர்ந்து
எண்ணிலா மகிழ்ச்சியுடன் இன்பமாய் ஆடும்!
**************************************************************************
மேற்கண்ட எனது மொழியாக்கத்தின் மூல கவிதை:
Daffodils -
Poem by William Wordsworth
**************************************************************************
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed--and gazed--but little thought
What wealth the show to me had brought: