உயிர் சிலுப்பிடும் செல்வியின் முத்தச்செல்பி
இந்த புனித முத்தம்
கொடுக்கும்பொழுது
பகல் பொழுதின்
சூரியனுக்கும்
இரவின் குளிர்
நிலவினிர்க்கும்
வெட்கக்கேடேதும்
வந்துவிட கூடாதென்பதற்கோ
கண்கள் மூடி
அரும் வரம்
வழங்குகின்றாய் ??
*******************************************************************************************
உலகின் வசீகரம்
அத்தனை அத்தனையும்
தன் அகத்தே கொண்டிருந்தும்
அகத்தே அடங்கியுடங்கி
கிடப்பதனால் தான்
தன் அடையாளத்துடன்
அழகின் அங்கீகாரமும்
அகன்றுபோனதாய் கருதி
எட்டி எட்டி பார்க்கின்றனவோ
நின் இரு
குட்டி நாசி துவாரங்கள் .....
**********************************************************************************************
மொட்டொன்று மலர்ந்திடின்
மலரொன்று மலர்ந்திடுமாம்
நீ இதழ்குவித்த மொட்டதுவும்
பட்டேனவே மலர்ந்துவிடின்
ஒன்றல்ல இரண்டல்ல
மூன்றிற்கும் குறையாத
செயற்கைப்பதிவையும்
சேர்த்து முப்பத்து சொச்ச
மலர்கள் பளிச்சிடும் ...
**********************************************************************************
அறிமுகத்தின்
ஆதி முதல்
இதோ
இக்கணத்திற்கு முன்பான
பாதி வரை
ஒட்டுமொத்த நாதியாய்
ஒளிருகின்ற சோதியாய்
சீரும் சிறப்புமாய்
இருந்து வந்தோம்
பாதியில் எங்கள்
பாதையில் வந்து
அளவினில் ,
அவன் தம் மனவிருப்பினில்
எங்களில் பாதியும் இல்லாத
நீங்களே ( கண் மூக்கு வாய்)
இவன்தன் மீதி நாட்களின்
விருப்பம் போல்
புலம்புகின்றானே என
அவன் விருப்பம் தான்தானென
தன் இருப்பை காட்டிக்கொள்ள
வெளி எட்டி பார்க்கின்றதுவோ
என் விருப்புகளில் ஒன்று !!