2 மழையென்பது

மழையென்பது உயிரே!
அதுஇல்லையேல் மயிரே!
விளைவிப்பது பயிரே!
விலைஇல்லையேல் கயிறே!

மழையென்பது கொடையே!
அதற்கேனடா தடையே?
பசுமைகொல்லும் படையே!
பசித்தார்க்கெது விடையே?

மழையென்பது வரவு!
வான்-பூமிக்கு உறவு!
உழவன்மனம் நிறைவு
அடைந்தால்சிறை குறைவு!

மழையென்பது அழகு!
பளிச்சென்றிடும் உலகு!
நனைந்தேஅதைத் தழுவு!
மனமாசினைக் கழுவு!

மழையென்பது மகிழ்ச்சி!
மனம்ஏங்கிடும் நிகழ்ச்சி!
கழுதைமணம் இகழ்ச்சி!
கவிபாடிடும் புகழ்ச்சி!

மழையென்பது கொடுக்கும்!
கடலில்அதை எடுக்கும்!
மிதமிஞ்சினால் கெடுக்கும்!
சளிகாய்ச்ச்சலில் படுக்கும்!

மழையென்பது வெள்ளம்!
ஏன்மூழ்குது இல்லம்?
உடன்தேக்கினால் வெல்லம்!
கடல்ஓடினால் கள்ளம்!

மழையென்பது விருந்து!
மகிழ்வோடதை அருந்து!
மறித்தால்எது மருந்து?
மனிதா,மனம் திருந்து!

மழையென்பது பொதுமை!
பாடம்படி புதுமை!
படிக்காவிடில் பதுமை!
கொடுக்காவிடில் எருமை!


நன்றி: தலைப்புத் தந்த தாகு.

எழுதியவர் : காளி மைந்தன் (28-Apr-15, 9:28 am)
சேர்த்தது : ராஜமாணிக்கம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 162

மேலே