என்னவனே - சகி

என்னவனே .........
உன்மீதுள்ள அத்தனை
கோபங்களுக்கும் நேரில்
கண்டவுடன் அடித்து
திட்டிவிட எண்ணிக்கொண்டே
பயணிக்கிறேன் ...............
நேரில் உன்னைக்கண்டவுடன்
சூரிய ஒளியில் மறைந்து
போகும் பனித்துளியாய்
உருகுகிறேன் .............