பச்சைக் கொலைகள்
வெறும் கவிதை எழுதி
கடந்திட முடியவில்லை..
உள்ளுக்குள் குலுங்கிக் கொண்டே
இருக்கிறது,
10000 பேர்களின் கதறல்....
அல்லது எனது ஒருத்தனின்
பூமி தாண்டி குதிக்கும்
மிரட்சி....
இயற்கையை மீறும்
போதெல்லாம் கொட்டி
செல்லும் பூமி.. இம்முறை...
அத்தனை
வெஞ்சினத்தையும்
கொட்டி
சென்றிருக்கிறது...
கதவற்ற பூமிக்கு
வானம் கூட இல்லை
என்ற
கூற்றுக்கு, தெறித்த
ரத்தங்களே சாட்சி.......
அது தொங்கித் தவிக்கும்
உயிர்களின் பெரும் வலியான
நுட்பக் கொலைகள்....
பச்சைக் கொலைகள்
யார் செய்தாலும்
குற்றம் குற்றமே...
எந்த கடவுள்
பொறுபேற்க இருக்கிறான்...
வரச் சொல்லுங்கள்...
அல்லது எந்த மனிதன்
முகம் திருப்பிக்
கிடக்கிறான்..
உதைத்து சொல்லுங்கள்...
எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டவையே...
மரணம் கூட.....
கவிஜி