உயர உயர பறக்கலாம் வாங்க - 12116
![](https://eluthu.com/images/loading.gif)
ஏறிவிட விருப்பம் இருந்தால்
ஏணிப்படி வானமடா....!
ஏனிப்படி என சலித்தால்
எழில் கனவும் மோசமடா..!
கனவுகளே நனவாக பெற்றோர்
கண்ட கனவே நாமடா
காரியத்தில் வெற்றி உண்டு நீ
கவலையை தூர வையடா..!
நிறைவேறா கனவுகள் யாவும்
நீ நினைத்தால் நனவாகும்
நினைவினிலே இனிமை வை
நிகழும் கனவு நலமாகும்...!