உயிர், வாழ்க்கை, மரணம்

ஒன்றில் உருவாகி
அவ்வழியே வெளியேறி
உடை ஒன்று போர்த்தி
நடை தொடங்கிடும்
நானிலத்தில் …!

எழும் வரையில் நீ
நல்ல பிள்ளை ..!
எழுந்த பின்னே நீ
வளர்ந்த பிள்ளை …!

கருவறையில் அது
இருந்ததெல்லாம்
கணக்கு பார்த்தே
மறந்து போகும் …!

வளந்த பின்னே
வரிச்சு கட்டி
பல கோணங்கள்தான்
போக தோணும் ..!

ஒன்றுமில்லா அதன்
மனதில் ஓராயிரம்
ஆசை பொங்கும் …!

ஆசை அதன் விளைவால்தான்
ஆன்மிகம் உருவாகும் .....!
தான் போகும் வழி தேடி
அச்சத்தினால் அது தோன்றும் ..!

நல்லதில் விழுந்துவிட்டால்
நல்லபடி யோசிக்கும் ....!
இல்லையேல் விதியென்று
ஒரு புது கதையை
சொல்லி நிற்க்கும் …!

ஒரு வழியில் பயணித்து
பல வழிகள் ஏமாந்து ....
மன வலிகள் தேடி பின்னே
மாற்றிவிடும் உடை அதுவை .!

பிறப்பிற்க்கு ஒரு வழி
நடப்பதுக்கு பல வழி
மரணத்தில் எவ்வழி
யாரறிவார் அவ்வழி …!

எழுதியவர் : வீகே (29-Apr-15, 2:15 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 105

மேலே