சமூகம்

சமூகம் இது
தேங்கி நிற்க்கும் சாக்கடை !
இதில் நீ நான்
எல்லாமே சுத்த களிசறை ….!
ஒன்றை தொட்டு
ஒவ்வொன்றும் நாறிவரும் ...!
தொடாமல் இருக்க நீ
கொஞ்சம் மாறவேணும் …!
மாற்றமது துணிந்தால்தான்
மாறிவிடும் வையகம்...!
மாற்றட்டும் யாரோ என்றால்
அது இறுதியில் ஏமாற்றம் …!
பத்தாண்டுக்கு முன் வரைந்த
சித்தாந்தங்கள் மாறவேண்டும் …!
உங்கப்பன் போட்ட சட்டை
நீ புதுசா மாற்றவேண்டும்…!
புதுமைக்கு ஏற்றாபோல்
புதுசா தான் மாறவேண்டும் …!
பழமைகள் அவை எல்லாம்
ஒரு பாடமாய் மாற்றவேண்டும் ..!
மடமை தனம் எல்லாம்
கொளுத்தியே மாற்றவேண்டும் …!
நம்பிக்கை அது மட்டும்
இறைவனாய் மாற்றவேண்டும் …!
எல்லைகள் இல்லாமலே
நல்லவைக்காய் மாற்றவேண்டும் …
பிள்ளைகள் அவையேனும் பின்
குறை தீர மாற்றம் வேண்டும் …!
நான் அது இல்லாமல்
நாம் என்று மாற்றம் வேண்டும் ..!
நாம் ஒன்று கூடியே
புதுமையாய் மாற்றவேண்டும் ..!!
ஒற்றுமையில் மட்டும் மாற்றம் உண்டு
இங்கு செத்த பிணம் தேவை இல்லை
பத்துபேர் சேர்ந்தால் மட்டும்
பார் முழுதும் சுத்தம் ஆகும் …!!