பாவேந்தன் பாரதிதாசன்

நீ சீர்திருத்த
வந்தவனல்ல-சுரண்டல்
சமூகத்தை உன் தூவலால்
புரட்டிப்போட வந்தவன்!
கல்லாமை
அறியாமை
இல்லாமை-இவை
எல்லாமும்
இல்லாமல் போக
நில்லாமல் உழைத்தவன்!
மூடநம்பிக்கையை
மூட்டைகட்ட-ஈரோட்டு விளக்கை
ஏற்றி வைத்தவன்!
ஓடப்பர் யாவரையும்
உதையப்பராக
மாற்றிய - உழைக்கும்
மக்கள் கவிஞனானாய்!
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கை ஏற்றி
ஒளி விளக்கானாய்!
பூமிப்பந்தில் பொன்னுலகம்
படைத்திட - தன் தூவல்களால்
ஓயாமல் செதுக்கிய
புரட்சிக் கவிஞன் நீயே!

எழுதியவர் : காமராசன் மண்டகொளத்தூர் (29-Apr-15, 11:53 pm)
பார்வை : 84

மேலே