என் கவிதையின் தேடல்

அவள் நினைவுகள்
மூழ்கிட ..
இதயம் நிரம்பி
சிதறிய திவலைகள்
என் கவிதைகள் !!!
திவலைகள் திரட்டி
அவள் திசையில்
ஆழியாய் பரப்பிட ..
எத்தனிக்கும்
என் கவிதைகள்
ஏனோ ??
இன்னும் …
அவ் வொருத்தியின்
பாதம் தீண்டாத
ஆழி அலைகள்..
என் கவிதைகள் ...