நகர அடம் பிடித்தது
நகர அடம் பிடித்தது ..
----------------------
குழந்தையாய் இருந்த போது
உறவினர் வீட்டுக்கு போன உம்மாவை
எதிர்பார்த்து ஏங்கிய நொடிகள் ...
நகர அடம் பிடித்தது ..!
மழலையாய் இருந்த போது
வெளியூர் போன வாப்பாவின்
வருகையை வாசலில் நோக்கிய நாட்கள்...
நகர அடம் பிடித்தது ..!
மங்கையாய் ( தங்கையாய் ) இருந்த போது
நானாவின் தொலைபேசி அழைபிற்காக
தூக்கம் தொலைத்த மாதங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!
மனைவியாய் கணவன் கடல் கடந்து
பயணம் போனதும் எப்போவருவாங்க..
தவித்த சில வருடங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!
தாயானபோது( இப்போது)
வயிற்றில் உள்ள என் கண்மணி..
உன்னை எப்போ பார்த்து
மடியிலும் மார்பிலும் போட்டு
கொஞ்ச போறேன் ...
இப்பவும் நாழிகை
நகர அடம் பிடித்தது ..!
நீங்களே சொல்லுங்கள்
உணர்வை உலுக்கி பிழிந்து
நகரஅடம் பிடித்த நிகழ்வு எதுவாக இருக்கமுடியும் ஒரு பெண்ணிற்கு ?
- by மஜபா(majafa)
-------------------------------------------