புடவை உடுத்தாதா முதல் தாய்

குமுதம் பூவில் குவிந்த
மொட்டே மழலை அஞ்சுகம்
கட்டி அணைக்கையில் துயர்
கூட தூரம் விலகி நிற்கின்றது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ஆடும் விளையாட்டில்
என்னையும் உன் தோழனாக
சேர்த்து கொள்வாய்
புடவை உடுத்தாதா முதல்
தாயாக உனக்காக வந்தேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் அம்மா எங்கே என்று
நீ கேட்டால் என்ன பதில்
கூறுவேன் அன்னையின்
வயிற்றில் இருந்து வரும்
போதே அவரை துயிலின்
கடலில் தூங்க வைத்து

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ மட்டும் என் நெஞ்சில்
வந்து குதித்து விட்டாய்

எழுதியவர் : துளசி (3-May-15, 8:26 am)
சேர்த்தது : துளசி
பார்வை : 116

மேலே