சங்கமித்த சந்த கவியவள்

தங்க நதிக்கறையில்
தவழ்ந்து வந்த வெள்ளி நிலவவள்
சங்க எழுத்துக்களில்
சங்கமித்த சந்த கவியவள்

என்ன வரம் பெற்றதோ?
அதை எங்கு சென்று பெற்றதோ?
அவள் பவள கைகளில்
மகிழ்ந்தாடும் புத்தகமும்
அவள் வைர விரல்களில்
விளையாடும் எழுதுகோலும்

அவை இரண்டிற்கு
எத்தனை மதிப்புகளோ?
ஆயிர கோடிகளையும்
தாண்டிடுமோ?

அவள் உதடு பட்ட
தண்ணீர் புட்டி
பலரது தாகத்தை
உண்டாக்குமோ?

அவள் மேனி பட்ட
சவர்க்காரம்
உலகின் மிகச்சிறந்த
வாசனை பொருளாய்
அறிவிக்கப்படுமோ?

அவள் துவட்டிய துண்டு
இந்த நூற்றாண்டின்
வரலாற்று சின்னமெப்படுமோ?

அவள் வெட்டி
எறிந்த நகங்கள்
இணையத்தில்
ஏலம் விடப்படுமோ?

அவளது மலரடி
பாதம் பட்ட
பிஞ்ச செருப்புகள்
குறிஞ்சி மலர்களால்
அலங்கரிக்கப்படுமோ?

அவள் கல்லூரி தேர்வில்
தேர்ச்சி பெற்றால்
சமூகவலைத்தளத்தில்
உலகளவில்
டிரென்ட் செய்யபடுமோ?

எழுதியவர் : கோபி (5-May-15, 12:41 am)
பார்வை : 116

மேலே