என்னை நீ என்ன செய்தாய்
மழைத்துளி போல் உன் கண்கள் தீண்ட ,
என் கண்களில் உன் முகம் கண்டேன் ,
காற்று கூட வீசும் உன் வாசம் ,
என்னை நீ என்ன செய்தாய் .....
நிலவு போல உன் நினைவு தீண்ட ,
என் கண்கள் ஒளி வீசக்கண்டேன் ,
கால்கள் கூட தேடும் உன் வாசல் ,
என்னை நீ என்ன செய்தாய் .......
ஊஞ்சல் போல ஆடுது உள்ளம் ,
பூவிலும் தெரியும் உன் முகம் கண்டு ,
நான் தான் என ஆனேன் என்று உள்ளம் கேள்வி கேட்க ,
என்னை நீ என்ன செய்தாய் .........