ஆண் பெண் நட்பு
உள்ளம் அன்பில் திளைக்க
கள்ளம் கபடமில்லா பழக்கத்தில்
உதவிட காத்திருக்கும் கரங்களுடன்
நண்பனின் பாதுகாப்பில் படைகளை
வென்றிடும் திறன் பெற்றிட - இறைவா....
காலம் முழுதும் தொடரும் தோழமை,
என் தமையன் வடிவில் தந்திடு!
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நித்தமும்
உதவிடும் உள்ளம் தந்திடு!