குடும்பம் என்னும் குதூகலம்
நீண்டதொரு தூக்கம்
தட்டி எழுப்பி தேநீர்
நீட்டினாள் தாய்
பழக்கதோஷத்தில் தடவிப்
பார்த்தேன் இல்லை விடுதியில்
பல் துலக்கியபடி சென்றேன்
கண்ணாடியில் எடுக்க மறந்த தாடி
நினைவுக்கு வந்தாள் தங்கை
என்னடா அசிங்கமா இது அண்ணா
குளித்து முடித்து திரும்புகையில்
மணி ஒன்பது
இன்னுமா புறப்படல
மின்னலாய் வந்து சென்ற தந்தை
தொலைக்காட்சியில் மட்டைப்பந்து
போட்டி
கவி மஞ்சள் நிற சட்டை தான்
சென்னையா என
நொறுக்குத்தீனியோடு அம்மா
காணவில்லை இங்கு
சோர்ந்து வந்த போது
என்னடா ஆச்சு
கழுத்தில் கை வைத்து
தலைக்கோதும் அப்பா
நடிக்கிறான் பா என
பொறாமை படும் தங்கை
சும்மா இருடி பாவம் புள்ள என
பக்கவாட்டில் அம்மா
எல்லாம் இங்கு கானல் நீராய்
குடும்பம் தரும் சுகம்
எதுவென்று அறிந்தேன்
தாயிடும் உணவு
அமுதென்று உணர்ந்தேன்
தந்தையின் திட்டும்
சுகமென்று புரிந்தேன்
தங்கையின் சீண்டல்கள்
இல்லாது துடித்தேன்
குதூகலம் அற்றவனாய் நான்