காதல் தோன்றிய நிமிடம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
என்னோடு எப்போதும் இருந்தாய்,
ஆனால்
அப்போது நீ என் காதலி அல்ல!
இன்று நீ
என் காதலி!
நமக்குள் காதல் வந்த நிமிடம் எது?
என் அருகில் நீ,
உனக்கும் எனக்கும் இடைவெளி இருவிரல் தூரம்,
உன் மஞ்சள் நறுமணம் -என்
மூச்சு காற்றுக்குள் நுழைந்து
மூளையை சென்றடைந்தது !
என் கண்கள் உன் காது மடல்களை
எப்போதும் இல்லா கூர்மையோடு கவனித்தது.....
உன் இதழின் ரேகைகள் -என்
இருதயத்தின் வால்வுகளை வெளிவர சொல்லியது......
இதுதான் காதல் தோன்றிய நிமிடம் ,
ஆனால் இதை நீ அறியவில்லை...
இயல்பான என்
இதழ்களில் ஓர் வேதியல் மாற்றம்!
இதுதான் உயரியல் என்றால்- என்
காதலில் ஓர் அறிவியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது ..........
இதுதான் என் காதல் தோன்றிய நிமிடம்.........