கடவுளை தேடுகிறேன்
கடவுளோடு கை கோர்த்து
நடந்த ஒரு கணத்தில்
கண்ணில் தென்பட்டாய்!
கடவுளை கைவிட்டு
காதலி என உன்னை
பின்தொடர்ந்தேன்!
எத்தனையோ பொழுதுகள்
உன் கனிமொழிக் கேட்டு
கடவுளை மறந்து இருந்தேன்!
இணைந்தே இருக்கும்
உன் உறவு இறுதிவரை
என உறுதியாய் இருந்தேன்!
இன்று நீ
கைவிட்டுவிட்டாய்?
கடவுளை தேடுகிறேன்
ஆறுதல் பெற...