உன்னோடு பேசுகிறேன்
உன்னை பார்த்தால் கவிதை கொட்டுகிறது என்றேன்.
இரு..! இரு...! தலையில் வந்து கொட்டுகிறேன் என்றாய்.
கொட்டினால் கண்ணீர் முட்டுமே...
என் கண்ணீர் துடைக்க
உன் கை விரல்களே வருமாயின்
வா வந்து கொட்டு. என்றேன்.
வாயடைத்துப் போனாய் நீ...