படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை-யாருமற்றவளல்ல-ரகு
இசைப் பூக்கள் கமழக் கமழ
ஒளி நர்த்தனங்களோடு
புலர்ந்து விட்டிருந்தது வானம்....!
சிட்டுக்கள் வளையல்களாய்
குயில்கள் கொளுசுகளாய்
இசைமீட்டிச் சிறகடித்தன
என் தனிமையில்..........!
கனவுகள் கூட
முகாரி இசைத்ததில்லை ஒருநாளும்
தடயங்கள் அழிவது நிஜமெனினும்
பரவசப் பயணம் பார் -என
நடந்தது நதி......!
வயலின் வழி
இழையோடும் புன்னகை
அவ்வப்போது வியாபித்து விடும்
எனதழகிலும்..........!
யாரோ வினவியதை
நிராகரித்திருந்தாள் மடிவிரித்திருந்த
இயற்கையன்னை
ஒரு நீள் மௌனத்தில் விவாதித்திருந்தேன்
நானும்....!
அனுதாபத்திற்கென்
ஆழ்மன அறிவிப்பு என்னவெனில்
யாருமற்றவளல்ல நான்.......!
------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்: சுஜய் ரகு
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304