உனக்காக ஒரு பூ

உன்னை பார்த்ததில்
என் பிறப்பை உணர்ந்த நான்
பிரம்மன் படைப்பை கண்டு வியந்தேன்!

உன் காதல் ஒளியால்
என்னுள் பூத்த முதல் பூவை
உனக்கு பரிசளிக்கிறேன்
அதன் தேனை எடுத்துகொள்...........

அந்த முதல் பூ
முள் இல்லா ரோஜா
சூரியனை நினைக்காத தாமரை
நீ முகரும் போது மட்டும்
மணம் வீசும் மல்லிகை...............

அந்த மலர் கூட உன் வெட்கத்தால்
சிவந்து போகிறது....................

எழுதியவர் : priyajose (12-May-15, 4:32 pm)
Tanglish : unakaaga oru poo
பார்வை : 203

மேலே