பிரியாவிடை
முழுநிலவும் தேய்ந்ததோ
கடலலையும் ஓய்ந்ததோ
வேண்டாமென்று ஓடினாலும்
விரட்டிக்கொண்டு வந்துவிட்டது..
நாம் எதிர்பாராமல்
எதிர்பார்த்த கடைசி நாள்!
கண்ட கனவுகளெல்லாம்
விடியற்காலையில் கலைந்ததுபோல
எங்களது கனவுகளை எல்லாம்
உள்வாங்கிக்கொண்ட
கடலாய் நிற்கிறது எங்களது கண்கள்!
இன்று பழகிவிட்ட முகங்களை எல்லாம்
என்றோ தான் பார்போம் என்று நினைக்கையில்
விட்டுப்பிரிய நெஞ்சமில்லை..
பிரியா விடை தரும் என்
கண்ணீருக்கும் பஞ்சமில்லை..