ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பிறந்தது எங்கோ ?
இணைந்தன இங்கே !
மலர்கள் !

பிரிந்து இருந்தவைகளை
இணைத்தது நார்
மலர்கள் !

பயணம் எங்கோ
கோவிலுக்கா ? மயானத்திற்கா ?
மாலை !

யாருக்கோ ?
மணமக்களுக்கா ? மரணித்தவர்களுக்கா ?
மாலை !
ஆடாதே மனிதா
ஆடி உணர்த்தியது
மாலை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-May-15, 7:44 pm)
பார்வை : 107

மேலே