குடும்பம் என்னும் குதூகலம்
உறவுகள் கூடி உயிராகப் பேண
சிறக்கும் குடும்பமும் சீராய் - அறமுடன்ப்
பண்புகளும் பாசமும் பல்கிப் பெருகிடும்
வண்ணமுறச் செய்திடும் வாழ்வு .
அமைதியுந் தந்தே அரவணைக்கும் அன்பாய்
இமைபோலக் காக்கும் இதமாய் - சுமையாய்க்
கருதாமல் யாவரையுங் கண்ணின் மணிபோல்
கருதும் குடும்பம் கனிவு .
கூடிடும்கு தூகலம் கூட்டுக் குடும்பத்தில்
ஈடில்லா நற்பலன் ஈந்திடும் - நீடிக்கும்
ஆனந்தம் என்றென்றும், அல்லவை நீங்கிடும்
வானவரும் வாழ்த்தும் வரம் .