வெண்பா முயற்சி

பல விகற்ப பஃறொடை வெண்பா

கயவர் நடக்கும் கயநாட்டுள் நீயுமங்கே
நீதியை வென்றநல் நாட! சிறப்புடன்
புத்தி தெளிந்து நெறியுடை உள்ளத்தால்
தீதில்லாக் கொள்கை அறுத்தாரை நோக்கி
மருங்கியே வாழ முயன்றார் நெருங்கித்தான்
செம்மைசால் நட்புநாடி யேநிற்க திண்ணமாய்
உண்மையின் பாலே நிலைத்து! 1

----------------------------------------------------------------------------

இரு விகற்ப நேரிசை வெண்பா

கயவர் துணிந்தே நடக்கின்ற தூங்கா
கயநாட்டுள் நீயுமங்கே கண்டாய் - ஜெயமாக
நீதியை வென்றநல் நாட! சிறப்புடன்
ஆதிபுத்தி பெற்றுவாழ் க! 1

நெறியுடை உள்ளத்தால் தீதில்லாக் கொள்கை
அறுத்தாரை நோக்கி மருங்கி - உறுதியாய்
வாழ முயன்றார் நெருங்கித்தான் நட்புநாடி
ஆழவுண்மை யின்பால் நிலைத்து! 2

நெறியுடை உள்ளத்தால் தீதில்லாக் கொள்கை
அறுத்தாரை நோக்கி மருங்கி - உறுதியாய்
செம்மைசால் நட்புநாடி யேநிற்க உண்மையில்
தம்மைத்தான் நன்றாய் நினைத்து! 3

------------------------------------------------------------------------------

பல விகற்ப இன்னிசை வெண்பா

நெறியுடை உள்ளத்தால் தீதில்லாக் கொள்கை
அறுத்தாரை நோக்கி மருங்கி - உறுதியாய்
வாழ முயன்றார் நெருங்கித்தான் நட்புநாடி
உண்மையின் பாலே நிலைத்து! 1

--------------------------------------------------------------------------

குறிப்பு : இதை எழுத உதவி செய்த கன்னியப்பன் ஐயா அவர்களுக்கு நன்றி ..

எழுதியவர் : Raymond (17-May-15, 8:26 pm)
பார்வை : 96

மேலே