விஷம் படரும் காதல்
உக்கிரத் தாண்டவமாடி
உச்சம் பற்றிக் கண்ணறைக்குள்
ரகசியமாய் சுழன்றடிக்கும்
நீ ஒளித்திருக்கும் உன் காதல்.
அரவமெனத் தீண்டும்
உன் விழியின் சுழிமுனைகள்...
என் கண் பொத்தி, உடல் சுற்றி வியாபிக்கும்
விஷம் படரும் நதியென.
சூசகமாய் உள் நுழைந்து
மணல் வீசிப் புழுதியென
பார்வைகளால் படமெடுத்து
சுருங்கி இழையும் என் மனசின் புற்றுக்குள்
மணிச்சதங்கை ஓசையுடன் உனது முகம்.
அந்திக் கள் குடித்து...
அலையும் என் மரங்கொத்தி
உன் அக்கானிப் பேச்சுக்களை
என் கூட்டுக்குள் சேமிக்க....
அடைகாக்கும் என் உணர்வின்
வெப்பம் தாளாமல்...
வெடித்துச் சிதறும் இந்தக் கவிதை.