அமைதியைத் தேடி

தொட்டிலில் அழுதபோதும்...
பள்ளியில் கூச்சலிட்டபோதும்...
கூட்டத்தில் ஆர்ப்பரித்தபோதும்...
கேள்விகள் கேட்டபோதும்...
அமைதிப்படுத்த பட்டேன் -
அந்த அமைதி -
ஒரு மூச்சுத் திணறலாய்...
பின்..
தியான மண்டபங்களும்..
நோய்ப் படுக்கைகளும்...
கொடுக்காத அமைதியை
இறுதியாய் பெற்ற போது -
அக்னிக் கூட்டுக்குள் என்னை
அவசரமாய் வழியனுப்பிய
நான்கு பேர்களும்
மீண்டும் திரும்பினர்...
ஆராவார பேரிரைச்சலில்
அமைதியை தேடியும்...
அமைதியை நிலைநாட்டவும்.....