அவர்களுக்கும் காதல் 2

அறை திறக்கும் பொழுதெல்லாம்
அழுகிறது மேசை
ஐந்து விரல்களும் பிடியில் மட்டும்.
*
சன்னல் கம்பியோடு திரை
சத்தமின்றிப் பயிலுகிறது
நா துருத்தும் நளினத்தை
*
அங்கலாய்க்கும்
சிமிக்கியாகிட
ஆடிப்பார்க்கிறது
கடிகாரப் பெண்டுலம்
*
கையிரண்டும் கோர்த்து நீட்டிப்
பேசியதை
முள்ளிரண்டும் முயற்சித்தது
மணிக்கொரு முறை
*
கசங்கிக் கிடந்த காகிதங்களைக்
கவலையோடு பார்த்தது
அடுக்கப்பட்ட ஆவணங்கள்
*

எழுதியவர் : மீ.மணிகண்டன் (29-May-15, 5:15 am)
பார்வை : 146

மேலே