இயற்கையும் தாயும்
இருவரும் ஒன்றடி
இருப்பேன் இவள் காலடி - நான்
மலர்ந்தால் அழுவேன் அவள் மடி
மறைந்தால் சேர்வேன் இவள் காலடி
இடைவெளி இல்லாத சிறுபடி
இலக்கணம் மாறாத இரு சொற்ரடி
இருவரும் ஒன்றடி
//இயற்கைக்கு
நான்கு வானம் நீயடி
வாசம் எங்கும் பூவடி
பேச்சிழந்த பெண்ணடி
மூச்சி மட்டும் பேச்சடி
கரு இழந்த தாயடி
என்னை சுமக்கும் தரணி நீ
//தாயிக்கு
எந்த வயதும் சிந்தி துடைபாள்
கண்ட பொழுது கண்ணீர் வடிப்பாள்
பொழுது கண்மூடி விழுந்து கொண்டாலும்
மதி என்னில் மழை பொழிவாள்
இதனால்
இருவரும் ஒன்றடி
இலக்கணம் வேறடி
//குளிர் காலம்
குளிர் வானம் குப்புற பனி
மெது வானமாய் அவள் சேலை எனை மூட
கருப்பனேன் அவள் சேலை நிழலில்
இருள் என்று நான் உதைக்க
குளிர் என்று அவள் எனை சுமந்தாள்
// இலையுதிர் காலம்
இலையுதிர் காலம் இலை அவள் ஓரம்
பெருங்காற்று நீ தந்தாய் புது இலை நான் ஏற்க
முதிர்கிளை நாணல் அவள்
என்னை முத்தமிட்டே தளர்ந்தாள்
எறுவாகி தித்தி நான் ஏற்க மகிழ்ந்தாள்
வீழ்ந்தாலும் விழித்திருந்தால்
மேல் நோக்கி பார்த்திருந்தாள்
//மழை காலம்
ஒதுங்கி கொண்டேன் ஓலை குடிசையில்
பதுங்கி கொண்டேன் பானை முடுக்கில்
காட்டு மழை கரை கடக்க
வீட்டு வாசலை விலை பேசுது
படி வாசலாய் அவள் இருக்க
பாதம் சேருமா மழை நீர்
பல நன்றிகள் என் இதழ் சொல்
குறிப்பு : இவள், நீ - இயற்கை
அவள் - தாய்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
