சத்தியத்தின் வெளிச்சத்தில்

சாட்ச்சியங்கள் வலுவாகத்தான்
இருந்தன
உண்மையைத்தான் சொன்னார்கள்
ஆனாலும் வழக்கு வக்கீலின் வாதத்தால்
முழுமையாக நிரூபிக்கப் படவில்லை
அப்பாவிக்கு அதிக பட்ச தண்டனை
நீதிபதி குற்றம் சாட்டப் பட்டவனை
கடைசியாகக் கேட்டார்
குற்றத்தை ஒப்புக் கொள்
தண்டனை குறைக்கப் படும்
செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வதைவிட
சாவது மேல் என்றான்
தீர்ப்பு மாறியது ;விடுதலை ஆனான்
சட்டம் சாட்சியம் வக்கீலின் வாதத்தின் மீது
மட்டும் தீர்ப்புகள் வழங்கப் படுவதில்லை
சத்தியத்தின் வெளிச்சத்தில் தீர்ப்புகள்
வழங்கப் படுகின்றன !
நீதி தோற்பதில்லை !
-----கவின் சாரலன்
குறிப்பு :நூறு குற்றவாளிகள் விடுதலை செய்யப் படலாம்
ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பது சட்டத்த்தின் கோட்பாடு