நா கறுப்பு தே

நண்பர் சரவணா அவர்கள் பதிந்த எண்ணம் ஒன்றினை தமிழில் தர நண்பர் திரு .ராஜன் பணித்தபடி இரண்டு வகையாய் கீழ்வருமாறு பதிந்துள்ளேன்..
நண்பர்களின் பார்வைக்கு..நன்றி திரு.சரவணா..திரு ராஜன் சார்:
***********************************************************************************************************
கவிதையாக:
***********************************************************************************************************
பிறந்த போது..
என் நிறம் கறுப்பு..
வளர்ந்தபோதும் அதேதான்..
சுட்டெரிக்கும் வெயிலிலும்
அச்சம் சூழ்கையிலும்
நோய்வாய்ப் படுகையிலும்..
உயிர் துறக்கும் போதும் கூட..
எப்போதும் என் நிறம் கறுப்புதான்..
எப்போதும் அது மாறியதேயில்லை!
..
ஆனால்..
வெள்ளையர்களே ..
நீங்கள்.............
..
பிறக்கும் போது ரோஜா நிறமாய் ..
வளரும் போது வெள்ளையாய் ..
வெயிலில் செல்கையில் சிவப்பாய் ..
குளிரும்போது நீல வண்ணமாய்
அச்சத்தில் மஞ்சளாய் ..
நோயினில் பச்சை படர்ந்து
உயிர் போகையில் சாம்பல் நிறமாய்
மாறி மாறி ..
நிறங்கள் நிறையக் காட்டும் நீங்கள் ..
என்னை அழைப்பதோ ..
நிறத்தவன்..
கறுப்பு நிறத்தவன் ..
என்றே !
*******************************************************************************************************
அந்த பிஞ்சு மழலையாக:
*******************************************************************************************************
நா கறுப்பு தே
பெறக்கப்போ
வளந்தப்போ
வெய்யல்ல வேவுரப்ப
பயத்தில..அப்ரம்
ஓம்பு சரில்லாதப்ப
சாமி கிட்ட போறப்ப கூட
அல்லா நேரத்திலியும்
ஒரே கலருதா ..
ஆமா ...
நா கறுப்பு தே!
..
ஏய்.. வெள்ளைக்கார பசங்களா..
நீங்கல்லாம் ..
பொர்க்கும் போது ரோசா மாரி..
அப்ரம்...வல்ரும்போது..
வெள்ளையா..மார்டுவீங்க..
வெய்யில்ல சேப்பா ..
குளுருல நீலமா..
பயத்ல மஞ்சாவா..
சொர்த்ல பச்சயா..
சாமிகிட்ட போ சொல்லோ
சாம்பக் கலரா மார்வீங்க ..
ஆனா ..என்னியப் பாத்து..
சொல்றீங்க..
கலர் பையன்னு..
கர்ப்பன்னு..
ம்ம்..!
நெறம்தா
என்னப் பிரிக்குது! .
**************************************************************************************************