முதல்வர் வேட்பாளர் - சந்தோஷ்
முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட சின்ன வாத்தியார் தேர்தல் பிரச்சார மேடையில் ...
“ எங்கள் கட்சியை நீங்கள் வெற்றி பெற வைத்தால் இந்தியாவிலே தமிழகத்தை முதல் மாநிலமாக ஒரே நாளில் மாற்றிக்காட்டுவேன்.
பிரச்சாரத்திற்கு பின்.... சின்ன வாத்தியாரின் வேலையாள் “ எப்படிங்க தலைவரே ஒரே நாள்ல தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்குவிங்க ? “
“ யோவ் அது பெரிய விசயமா..? இந்தியா மேப்- பை தலைகீழா மாத்தி காமிச்சி தமிழ்நாடு முதல் மாநிலம் ஆயிடுச்சின்னு சொன்னா நம்பிதானேஆகனும். கூமூட்டைங்க எவனும் கேள்வி கேட்கமாட்டான்ல.”
“ ஒ.. ஒ... பிரமாதம் தலைவரே. அப்போ கரெண்ட் பிரச்சினைக்கு ஆளக்கொரு இலவச பெட்டர் மாஸ் லைட் கொடுத்து ஒரேடியா பியூஸ் பிடுங்கிடுவிங்களோ ? ........”
தலைவர் : ???????
--இரா.சந்தோஷ் குமார்.