காதலில் தொலைந்த காதல்

காதலில் காதலை தொலைத்து காதலை தேடினேன்...

அன்பின் மிகுதியால் உனக்கும் எனக்கும் வரும் சண்டையில் தொலைந்ததா...

உயிரறுத்த வார்த்தைகளால் பெருகிவரும் கண்ணீரில் கரைந்தா...!

நீ அறைந்து சிவந்த கன்னத்தின் விரல் பதிப்பில் மறைந்ததா...!

இல்லை, லட்ச முத்ததின் எச்சத்தில் காய்ந்ததா...!

சினத்தில் சிதைந்ததா!
ஆசையில் அழிந்ததா!
எங்கு மாண்டு..
எங்கு புதைந்தது நம் காதல்...!

தொலைந்த காதலே ஒரு முறை வந்து போ....!
இறுதியாக சுவாசிக்க ...!

எழுதியவர் : ஜெயதேவி (6-Jun-15, 8:42 pm)
பார்வை : 552

மேலே